Тамільсько-хорватська книга-білінгва
அப்பல்லோ ஹீலர் மூலமாகவும், அஸ்கிலிபியஸ் மூலமாகவும், ஹைஜியா மூலமாகவும், பனேசியாமூலமாகவும், மற்றும் அனைத்து தெய்வங்கள் மூலமாகவும் அவர்களை என் சாட்சியங்களா கொண்டு, என்னுடைய திறமை, மருத்துவக் கூராய்வுக்கேற்ப சிகிச்சை அளிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
Kunem se Apolonom liječnikom, Asklepijem; Higijejom i Panakejom, svim bogovima i božicama, zovući ih za svjedoke, da ću po svojim silama i savjesti držati ovu zakletvu i ove obveze.
எனக்கு இந்தக் கலையைக் கற்றுத்தந்த ஆசிரியரை என்னுடைய பெற்றோருக்குச் சமமாகக் கருதுவேன்; என்னுடைய வாழ்வாதாரங்களை அவர்களுடன் பகிர்வேன்; அவருக்கு தேவைப்பபட்டால் என்னுடைய பணத்தை அவருடன் பகிர்ந்து கொள்வேன்; அவருடைய குடும்பத்தினரை என் சொந்த சகோதரர்களாக நடத்துவேன். அவர்கள் விரும்பினால் இந்த மருத்துவகை கலையை எவ்வித கட்டணமோ நிபந்தனையோ இல்லாமல் அவர்களுக்குக் கற்பிப்பேன்; என் சொந்த மகன்களுக்கும், எனது ஆசிரியரின் மகன்களுக்கும், ஹீலர் உறுதிமொழியை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்ட மாணவர்களுக்கும் கட்டளை மற்றும் பிற அனைத்து அறிவுரைகளையும் வழங்குவேன்.
Stoga ću učitelja ovoga umijeća štovati kao svoje roditelje, njegovu ću djecu držati svojom braćom, a budu li htjeli učiti ovu umjetnost, puočavat ću ih bez ugovora i bez plaće. Puštat ću da sudjeluju kod predavanja i obuke i u svem ostalom znanju moja djeca i djeca moga učitelja. Učit ću i đake koji se budu ugovorom obvezali i ovom zakletvom zakleli, ali nikoga drugoga.
எனது சிறந்த திறன் மற்றும் முடிவுக்கு ஏற்ப என்னுடைய நோயாளிகளுக்கு நலன் பயக்கக் கூடிய உணவுகளை மட்டுமே பரிந்துரைப்பேன். மேலும் நான் அவர்களுக்கு தீங்கோ, அநீதியோ இழைக்க மாட்டேன்.
Svoje propise odredit ću po svojim silama i znanju na korist bolesnika i štitit ću ga od svega što bi mu moglo škoditi ili nanijeti nepravdu.
யார் கேட்டுக் சொன்னாலும் என் நோயாளிகளுக்கு நஞ்சைக் கொடுக்க மாட்டேன். அதேபோல கருவைச் சிதைக்கும் மருந்துகளை எந்தப் பெண்ணுக்கும் தர மாட்டேன். நான் என் சொந்த வாழ்க்கையையும் மருத்துவக் கலையையும் தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் வைத்துக்கொள்வேன்.
Nikome neću, makar me za to i molio, dati smrtonosni otrov, niti ću mu za nj dati savjet. Isto tako neću dati ženi sredstvo za pometnuće ploda. Isto ću i pobožno živjeti i izvršavati svoju umjetnost.
சிறுநீரகக் கல்லால் பாதிக்கப்பட்டவர்கள் மீது நான் கத்தியைப் பயன்படுத்த மாட்டேன், ஆனால் கைவினைஞர்களுக்கு அதில் இடம் கொடுப்பேன்.
Neću operirati mokraćne kamence, nego ću to prepustiti onima koji se time bave.
நோயால் அவதிப்படும் எவருடைய வீடுகளுக்குள்ளும் பேதம் பாராமல் நுழைந்து சிகிச்சை அளிப்பேன். மேலும் வேண்டுமென்றே செய்யும் தவறுகளிலிருந்தும் தீங்கு விளைவிப்பதையும் தவிற்பேன். குறிப்பாக சிகிச்சைக்கு வரும் ஆண், பெண் அல்லது சுதந்திரமானவர்கள் — அடிமைகள் என்று எவருடைய உடல்களையும் அவமதிக்கமாட்டேன்.
U koju god kuću stupim, radit ću na korist bolesnika, kloneći se hotimičnog oštećivanja, a osobito zavođenja žena i muškaraca, robova i slobodnih.
சிகிச்சையின்போதோ, மருத்துவத் தொழில் தொடர்பான பயணங்களின்போதோ நான் அறியும் மருத்துவ ரகசியங்களை அதிலும் குறிப்பாக வெளியில் சொல்லக்கூடாதவற்றை புனித ரகசியங்களாகக் கருதி, நான் ஒருபோதும் வெளியிட மாட்டேன்.
Što po svojem poslu budem saznao ili vidio, pa i inače, u saobraćaju s ljudima, koliko se ne bude javno smjelo znati, prešutjet ću i zadržati tajnu.
இந்த உறுதிமொழிகளை மீறாமல், நிறைவேற்றினால், என் வாழ்க்கைக்காகவும், என் மருத்துவக் கலைக்காகவும் பேரும் புகழும் பெருவேன். ஆனால் நான் இந்த உறுதி மொழிக்கு மாறாக நடந்தால், அதற்குண்டான கெடுபலன்கள் எனக்கு நேரட்டும்.
Budem li održao ovu zakletvu i ne budem li je prekršio, neka mi bude sretan život i ugled ljudi do u daleka vremena; prekršim li ovu zakletvu i zakunem li se krivo, neka me zadesi protivno.
Реклама